வெள்ளி, 2 மே, 2014

பறையர் சத்திரியரா?

சிலர், பறையர்கள் என்றாலே  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கண்ணையும், காதையும் ,  கட்டிக்கொண்டு பாடிய பாட்டையே பாடுகின்றனர். பறையர்கள் அரசராகவும் இருந்திருக்கின்றனர். அடிமையாகவும் இருந்திருக்கின்றனர்.

சாதிவெறி கொண்ட  போலி வரலாற்று ஆசிரியர்கள்,  பறையர்  தாழ்த்தப்பட்டவர்   என்று  சொல்லி வருகிறார்கள், ஆம், அனைவருக்கும்  நல்லது செய்த பறையர் கீழ் சாதி என்றும் , திருடர்கள் , பிற உயிரை கொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றோர்கள் இன்று மேல்சாதி என்று கூறி அலைகிறார்கள்   . 

சிலப்பதிகாரம் தோன்றிய காலகட்டத்தில்   சேரர் ,  சாக்கியர் என்பதை ஆதிக்க வெறி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் ? கூற  தயங்குகிறார்கள் , கூறினால் பொறையர் என்பது    பறையர் என மருவிய உண்மை தெரிந்துவிடும் அல்லவா!. பொறையர் என்றால் பொறுமையானவர்கள் என்று பொருள். அத்தகைய பொறுமை பறையர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அதேபோல வீரமும் மிக அதிகமாக காணப்படுவது பறையர்களிடம் மட்டும்தான்.

சத்திரியர்களுக்கெல்லாம் சத்திரியர் பறையர் :


வீரம் என்றால் என்னவென்றே தெரியாத மடையர்கள்,
* பிற மனிதனை  கொல்வது, வீரம்
* பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது, வீரம்
* ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, வீரம்
* கலவரங்களில் ஈடுபடுவது, வீரம்
* ஆதரவுஅற்றவனை அடிப்பது, வீரம்  என்கிறார்கள்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் அல்ல   மனிதரிலும் கேடுகெட்ட  மடையர்கள், சொல்லபோனால் அரக்கர்கள் .

உண்மையான  வீரம் என்பது பிறரை துன்புறுத்தாமல் தன்  உடல் மற்றும் மன திட்பத்தை வெளிப்படுத்துவதாகும். தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன். அவனே உண்மையான சத்திரியன் .


பிற மனிதனை  கொல்வது:
                  
                           பிற  மனிதனை  மனிதநேயமின்றி  கொல்வது  வீரமல்ல, அது கொலை. எந்த ஒரு காரணமும் கேட்காமல்   தன் நாட்டு   அரசர் யாரை கொல்ல சொல்கிறாரோ  அவர்களை  கொன்று ,  கொலையுண்டவரின்  குடும்பத்தை அனாதையாக்கி  தவிக்கவிடும், ஈவு இரக்கமற்ற கொலையாளியை சத்திரியன் என்று கூற முடியாது.



பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது:

                         வழிமறித்து     பிறரின்   பசுக்களையும்,  உடமைகளையும்  பறிப்பவர்கள்  சத்திரியர்   அல்ல, அவர்கள்  திருடர்கள்.
           அது போன்று ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, இத்தகைய ஈன செயலில் ஈடுபடுபவர்கள் கொடும் அரக்கர்கள் ஆவார்கள்.


சத்திரியருக்கான  அனைத்து  பண்புகளும் பறையரிடம் மட்டுமே உள்ளது. அவற்றை கீழே காண்போம்.



நாட்டை   ஆள்பவன்  அரையன் 

நாட்டை   காப்பவன்  பரையன் 


        என்ற பழமொழிக்கேற்ப   கடவுளை  போன்று    பறையர்கள்   நாட்டையும், ஊரையும்  பாதுகாத்து வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். என்ற செய்தி வாயிலாக நாம் அறியலாம். இன்னும் பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56).     . பறையர்கள்  யாருக்கும்  துன்பம்  தராமல் நன்மை செய்து வாழ்ந்திருக்கிறார்கள். 

                   முன்னர் மழை நீரை கண்மாயில் சேமித்து தேவையானபோது கண்மாய் மடையை  திறந்து வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள். இப்படி திறக்கும்போது சில தடவைகளில் பாம்பு தண்ணீர் வரும் பகுதியை அடைத்துகொள்ளும் இத்தகைய சமயங்களில் யாராவது ஒருவர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி கொல்ல வேண்டும். இத்தகைய உயிருக்கு அஞ்சாத வீர செயலை எந்த    ஆண்ட பரம்பரையாவது அல்லது நாங்கள்  சத்திரியர் என கூவி திரிபவர்கள் செய்திருக்கிறார்களா ? இப்படி உயிருக்கு பயந்தவர்களை எப்படி சத்திரியன் என்று அழைக்கலாம்.
           
                ஆனால் பறையர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி மடை திறந்து அனைவரையும் மகிழ செய்தனர்.   இத்தகைய யாரும்  செய்ய அஞ்சும் செயல்களையே பறையர் அஞ்சாமல் செய்தனர்.  அதனாலேயே யாரும்  செய்ய அஞ்சும் செயல்களை யாரேனும் செய்தால் அவர்களுக்கு "பறையன்" என்கிற பட்டம் கொடுக்கபட்டிருக்கிறது.




                  
                        எத்தகைய வீர செயலாய் இருந்தாலும், அச்செயலால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என தெரிந்தால், அச்செயலை பறையர்கள் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அனைவர்மேலும் அன்பு கொண்டவர்களாகவும், ஆழ்ந்த பொறுமை உடையவர்களாகவும், பறையர் இருந்திருக்கின்றனர்.தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன். அவனே உண்மையான சத்திரியன் .எனவே  பறையர் சத்திரியரே.
               



10 கருத்துகள்:

  1. பறையன் என்பவன் யார் இன்றும் மறைக்கும் கால சூத்திரமா. சாதியத்தில் பறையன் முதல் பார்பனன் வரை ஏதோ ஏறுவரிசை இறங்கு வரிசை மாதிரி பார்ப்பானுக்கும் பறையனுக்கும் என்ன வித்தியாசம். பார்ப்பானுக்கும் பறச்சிக்கு பிறந்தது நுரை சாதி பறையனுக்கும் பார்பத்திக்கு பிறந்தது குரை சாதியாம். ஆனா மரபியல் என்ன கூறுகின்றது. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே காபோலோ செல்கள் மரபனுவில் உள்ளது என்று எப்படி பறையனுக்கும் பிர்ம்மனுக்கும் என்ன சம்பந்தம்.

    பார்ப்பானுக்கு நாதஸ்வரம்,மிருதங்கம்,பரதனாட்டியம், பறையனுக்கு பறைமேளம்,தெருகூத்து,ஆட்டம். ஏதும் வித்தியாசம் இருக்கா
    மாடு தின்பான் பார்ப்பான்
    மறை ஓதுவான் பறையன்.


    மாடு தான் பொதுவானது பார்ப்பானுக்கும் பறையனுக்கும்.

    பார்ப்பான் || இடையன் || பறையன். இடையன் என்பவன் பார்ப்பான் பறையனுக்கு இடைப்பட்டவன் தான் இந்த இடையன். இடையன் வளர்க்கும் ஆவினத்தின் பாலையும் மூத்திரத்தையும் பயன்படுத்துவான் பார்ப்பனன். தோலையும் ரத்ததையும் பயன்படுத்துவான் பறையன். இடையன் என்பவன் பார்ப்பானுக்கும் பறையனுக்கும் இடைபட்டவனே.

    பார்ப்பான் தன்னை ஆயன் எனவும் ஆயன் என்பது தான் பிற்காலத்தில் ஐயன் என்று தன்ன்னை கூறினான்.
    ஆவினங்கள் மேய்த்தவனே பின்பு பூசகன் ஆனான்.

    தமிழ் நாட்டில் எத்தனை ஆயர்பாடிகள் இருந்தது. கிடையாது தமிழகத்தில் ஆயர்பாடிகள் கிடையாது ஆனால் பார்ப்பான சேரிகள் தான் உண்டு சோழர்கள் இந்த சேரி முறைகளை நண்கு அறிந்திருந்தனர் அதனால் தான் பார்ப்பான சேரி,பறைசேரி,இட்சேரி,தீண்டாசேரி,புறன்சேரி,கம்மான்சேரி, ஈழவசேரி என சேரிகள் என்பது இந்த ஓரே இனத்தின் பல மரங்கள் சேர்ந்த இடம் தான்.

    இந்த அனைத்து மக்களும் ஒரே இனத்தவர்தான் பார்ப்பன்,பறை,கம்மாளர்,இடயர்,தட்டார்,ஈழவர்,குசவர் என இம்மக்கள் அனைவரும் சேரிமக்கள் தான். எனவே தான் இவர்கள் வாழிடம் சேரி எனப்பட்டது.

    பறையன் என்பவன் கீழ்மகன் அல்ல அவனே வேதியனால் மறுக்கபட்ட ஆதிபார்ப்பான்.

    பதிலளிநீக்கு
  2. அரபு மொழியில் ஐயர் என்றால் மகா திருடன் என்று அர்த்தம்

    பதிலளிநீக்கு
  3. பறையன் உயர்ந்தவன் என்று உலகரியட்டும்

    பதிலளிநீக்கு
  4. எல்லா இனத்தவரும் சமம்
    நான் பறையர்தான்

    பதிலளிநீக்கு
  5. முதலில் நாம் மனிதர்கள்

    பதிலளிநீக்கு
  6. SEGA - Lucky Club Live Casino site
    Our SEGA online casino and bingo offers you 카지노사이트luckclub a wide range of exciting casino games and many extra jackpots. We provide you with a variety of games such as

    பதிலளிநீக்கு
  7. The best place to bet on casino and get - Grizzly
    Casino games are not 슬롯 머신 규칙 available in a state, yet. For many, 배팅 slots 오산 휴게텔 are 헐리우드노출 available on the casino 강원 랜드 앵벌이 floor or

    பதிலளிநீக்கு
  8. Harrah's Casino Hotel | JamBase
    Guests can enjoy 김포 출장마사지 their favorite Harrah's gaming, entertainment, dining and 서산 출장안마 more at the Harrah's Hotel in Joliet, 여주 출장마사지 Illinois. Guests 공주 출장안마 can enjoy their favorite 김천 출장마사지

    பதிலளிநீக்கு